CM Vijay | TVK | VanniArasu | VCK | "முதல்வர் விஜய் தெளிவாக சொல்லிவிட்டார்..." - அமைச்சர் வன்னிஅரசு

"அதிகாரிகள் சாதிய பாகுபாட்டுடன் செயல்பட்டால் கடும் நடவடிக்கை" அதிகாரிகள் சாதிய பாகுபாட்டுடன் செயல்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் வன்னி அரசு எச்சரிக்கை விடுத்துள்ளார்... கோவை மாவட்டம் அண்ணா நகர் பகுதிக்கு சாதிய பாகுபாட்டால் கடந்த 15 ஆண்டுகளாக அரசு பேருந்துகள் இயக்கப்படாமல் இருந்ததாக கூறப்பட்டது... கடந்த மாதம் முதல் அண்ணாநகர் பகுதிக்கு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது... இந்நிலையில் அந்த அரசு பேருந்தில் அமைச்சர்கள் வன்னி அரசு, சம்பத்குமார் பயணித்தனர்... தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வன்னி அரசு, அதிகாரிகள் மெத்தனப் போக்குடன் செயல்படுவதை விட்டுவிட வேண்டும் எனவும், தாமாகவே முன்வந்து மக்கள் பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் தெரிவித்தார்...

X

Thanthi TV
www.thanthitv.com