CM Vijay | Secretariat | நேரடியாக மனுக்களை பெறும் CM விஜய் | 24 மணி நேரமும் ஹைஅலர்ட்டில் கோட்டை

நேரடியாக மனுக்களை பெறும் CM விஜய் | 24 மணி நேரமும் ஹைஅலர்ட்டில் கோட்டை

நேரடியாக மனுக்களை பெறும் CM விஜய் | 24 மணி நேரமும் ஹைஅலர்ட்டில் கோட்டை

CM விஜய்யின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை தலைமைச் செயலக பகுதியில் சிசிடிவி கேமராக்கள் அதிரடி ஆய்வு முதலமைச்சா விஜய்யின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், சென்னை தலைமைச் செயலகம் சுற்றுவட்டாரத்தில் உள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறையினர் முழுமையாக ஆய்வு செய்து வருகின்றனர். ராஜாஜி சாலையில் உள்ள ரிசர்வ் வங்கி முதல் போர் நினைவுச் சின்னம் வரை அமைக்கப்பட்டுள்ள கேமராக்கள் அனைத்தும் சரியாக செயல்படுகிறதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டு, பழுதடைந்த கேமராக்கள் உடனடியாக சீரமைக்கப்பட்டு வருகின்றன. முதலமைச்சர் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெறும் சூழலிலும் பாதுகாப்பில் எந்தவித குறைபாடும் ஏற்படாத வகையில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கேமரா காட்சிகள் 24 மணி நேரமும் கட்டுப்பாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

X

Thanthi TV
www.thanthitv.com