அமைச்சரவை கூட்டத்தில் முகத்துக்கு நேராகவே எச்சரித்த CM ஸ்டாலின்?

x

தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அண்மையில் அமைச்சர்கள் பொன்முடி மற்றும் துரைமுருகன் ஆகியோரின் பேச்சுக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் அமைச்சர்களுக்கு பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசுக்கு அவப்பெயிரை ஏற்படுத்தும் வகையில் அமைச்சர்கள் நடவடிக்கைகள் இருக்கக் கூடாது பேச்சுக்கள் இருக்கக்கூடாது என்பதை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் துறை ரீதியான பணிகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்