CM Stalin | DMK | திமுக மகளிர் அணி மாநாடு.. முதல்வர் எக்ஸ் தளத்தில் பதிவு
திமுக மகளிரணி மேற்கு மண்டல
மாநாட்டை ஒட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் உள்ள நம் சகோதரிகள் அனைவரும் வெல்லும் தமிழ்ப் பெண்கள் தான் என தெரிவித்துள்ளார். வெல்லும் தமிழ்ப் பெண்கள் எனும் தலைப்பில் திமுக மகளிரணி மேற்கு மண்டல மாநாடு பல்லடத்தில் இன்று (29.12.2025) நடைபெற உள்ளது. இதனை ஒட்டி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், திராவிட இயக்கத்தால் தலைநிமிர்ந்து வெற்றிநடை போடும் போராட்ட வரலாற்றையும், வருங்காலத்தில் ஆற்ற வேண்டிய கடமைகளையும் பல்லடத்தில் நடைபெறும் திமுக மகளிரணி மாநாடு சொல்லும் என தெரிவித்துள்ளார்.
Next Story
