CM Stalin | DMK | 'உடன்பிறப்பே வா' ஒன்-டூ-ஒன்.. 100 தொகுதிகளை நிறைவு செய்த CM ஸ்டாலின்
- திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நடத்திய ஒன்-டூ-ஒன் கலந்துரையாடலில் நூறு தொகுதிகளை நிறைவு செய்திருப்பதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.
- முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் கடந்த ஜூன் முதல் தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
- ஒவ்வொரு தொகுதிக்கும் குறைந்தது 8 முதல் 10 நிர்வாகிகளை அண்ணா அறிவாலயத்திற்கு நேரடியாக அழைத்து முதலமைச்சர் கலந்துரையாடி வருகிறார்.
- அந்த வரிசையில் இன்று புவனகிரி, கடலூர் மற்றும் மயிலம் என மூன்று 3 சட்டப் பேரவைத் தொகுதி நிர்வாகிகளை சந்தித்து அவர் ஆலோசனை நடத்தினார்.
- இதன் மூலம் இதுவரை 100 தொகுதிகளில் திமுக நிர்வாகிகளை முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
- இதில் உட்கட்சி பிரச்சனை, நிர்வாக ரீதியாக புதிதாக மாவட்டம் மற்றும் ஒன்றியங்களை பிரித்து, நிர்வாகிகளை நியமிப்பது தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
Next Story
