CM Stalin | கண்டிப்புடன் முதல்வர் ஸ்டாலின் போட்ட உத்தரவு
மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு விரைவாக சென்று சேரும் வகையிலும், புதிய திட்டங்களை விரைவில் செயல்படுத்தி, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தி உள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், துறை ரீதியான ஆய்வுக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்றது.
நெடுஞ்சாலை சிறு துறைமுகங்கள் துறை, உணவு மற்றும் கூட்டுறவுத்துறை, மின்சாரத்துறை உள்ளிட்ட துறைகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுப்பணித்துறை சார்பில் திருச்சி மற்றும் கோவையில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையங்களின் பணிகள், கலைஞர் பன்னாட்டு மையம், நெடுஞ்சாலைத்துறை சார்பில் முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம், புதிய சாலைகள் மற்றும் மேம்பாலங்கள் அமைப்பது உள்ளிட்ட பணிகள் குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார். கூட்டுறவு மற்றும் உணவுத்துறை சார்பில் ரேஷன் கடைகளை மேம்படுத்துவது, புதிய பணி நியமனங்களை மேற்கொள்வது, பொது விநியோக திட்ட செயல்பாடுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார். மின்சாரத்துறை சார்பில் புதிதாக துணை மின் நிலையங்கள் அமைப்பது, மாநிலத்தின் சொந்த மின் உற்பத்தி திறனை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.