காளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
காளையார்கோவில் திமுக கிராமசபை கூட்டத்தில் கோஷ்டி மோதல்
Published on
சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் பகுதியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. காளையார்கோவில் ஒன்றிய செயலாளராக உள்ள கென்னடி இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார். முன்னாள் மாவட்ட செயலாளர் சக்திக்கு அழைப்பு விடுக்காததால் அவரது ஆதரவாளர்கள் கூட்டத்தில் குழப்பம் ஏற்படுத்த போவதாக தகவல் வந்ததால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். சக்தியின் ஆதரவாளர்கள், கூட்டத்தை நடத்தக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்ததால் கிராமசபை கூட்டம் கைவிடப்பட்டது.
X

Thanthi TV
www.thanthitv.com