"நாட்டில் பதற்றத்திற்கு அமித் ஷா தான் காரணம்" - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா குற்றச்சாட்டு

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
"நாட்டில் பதற்றத்திற்கு அமித் ஷா தான் காரணம்" - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா குற்றச்சாட்டு
Published on

குடியுரிமை திருத்த சட்டம் விவகாரத்தில் நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றத்துக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தான் காரணம் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது. தேசிய குடிமக்கள் பதிவேடு, நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனஅமித் ஷா தெரிவித்ததும் பதற்றத்திற்கு காரணம் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார். நாடு முழுவதும் நடக்கும் போராட்டத்திற்கு மத்திய பா.ஜ.க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா குறிப்பிட்டார். இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி உண்மையிலேயே கவலைக் கொண்டிருந்தால், உடனடியாக தேசிய ஒருங்கிணைப்பு கவுன்சில் கூட்டத்தை அவர் கூட்டி அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் ஆலோசனை நடத்த வேண்டும் என்றும் ஆனந்த் சர்மா வலியுறுத்தியுள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com