kallakurichi | EV Velu | பெற்றோரை இழந்து கண்ணீரோடு நின்ற குழந்தைகள்..களமிறங்கிய அமைச்சர் எ.வ.வேலு
கள்ளக்குறிச்சி மாவட்டம் பூட்டை கிராமத்தில் தாய், தந்தை இருவரையும் இழந்து நிற்கும் பிள்ளைகளை, அமைச்சர் எ.வ.வேலு நேரில் சந்தித்து நிவாரணம் வழங்கினார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக குழந்தைகளுடன் பேசி, அனைத்து உதவிகளும் செய்வதாக தெரிவித்து இருந்தார். இந்நிலையில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர், குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி 1 லட்சம் ருபாய் நிவாரண உதவியும் வழங்கினார். மேலும் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் கலைஞர் கனவு இல்ல வீடு கட்டித் தரப்படும் எனவும், தற்காலிக பணி வழங்கப்படும் என்றும் கூறினார்.
Next Story
