Nainar Nagendran Tweet | நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி, வேதனை
தமிழகத்தில் கடந்த ஆண்டு குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை 56 சதவீதம் அதிகரித்திருப்பது, வேதனையையும், அதிர்ச்சியையும் அளிப்பதாக, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுளாக பாலியல் குற்றங்களும், பதின்ம வயது கருத்தரித்தலும், குழந்தைத் திருமணங்களும் கட்டுப்பாடின்றி அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் இருக்கும்போது சமூகநீதி எப்படி சாத்தியமாகும்? என்றும் அவர் கேள்வி எழுப்பியுளார்.
அரசின் அவலத்தை மூடி மறைக்கவே, இந்தி எதிர்ப்பு, தொகுதி மறுவரையறை, மாநில உரிமை என முதல்வர் ஸ்டாலின், மக்களை மடை மாற்றிக் கொண்டிருக்கிறாரா? என்றும் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
Next Story