முதல்வர் ஸ்டாலின் போட்ட பரபரப்பு ட்வீட்

x

மத்திய மாநில உரிமைகளை வலுப்படுத்த மாநில சுயாட்சிக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், பசியால் வாடித்தவிக்கும் குழந்தைக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்பது தாய்க்குத் தெரியும், அதனையும் டெல்லியில் இருக்கும் யாரோ ஒருவர் தீர்மானித்தால் அந்தத் தாய் பொங்கி எழுவாள் எனக்கூறியுள்ளார். மேலும், மாநில உரிமைகளைக் காக்கவும், மத்திய - மாநில உரிமைகளை வலுப்படுத்துவதற்கான கூறுகளை ஆராய்ந்திடவும் குழு அமைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், அந்தக்குழு அளித்திடும் பரிந்துரைகளைச் செயல்படுத்திட அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வோம் எனத்தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்