BJP Tamilisai | CM | "முதல்வர் ஸ்டாலின், மக்களை ஒன்-டூ-ஒன் சந்திக்க வேண்டும்"- தமிழிசை சௌந்தரராஜன்
முதலமைச்சர் ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளை சந்திக்காமல், மக்களை ஒன்-டூ-ஒன் சந்திக்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தி உள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், முதல்வர் ஸ்டாலின் மக்களையும், மருத்துவர்களையும் முதலில் சந்திக்க வேண்டும் என்றார். தேசிய ஜனநாயக கூட்டணி வலுவாகவும் ஒற்றுமையாகவும் உள்ளது என்றும், பாஜக-அதிமுக கூட்டணி, ஆளும் திமுகவுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
Next Story
