முன்னாள் அமைச்சர் முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியில், மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலி மாறனின் உருவப்படத்திற்கு முதலமைச்சர் ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்...
கூடுதல் தகவல்களை செய்தியாளர் சத்யகுமாரிடம் கேட்கலாம்...
முன்னாள் மத்திய அமைச்சர் முரசொலிமாறனின் 90வது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மரியாதை....
மதுரையில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் சிலைமான் பகுதியில் மரியாதை செலுத்தினார், முதல்வர் ஸ்டாலின்...
முரசொலி மாறனின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் உள்ள முரசொலி மாறன் திருவுருவ படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை
மதுரை மற்றும் ராமநாதபுரத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மூன்று நாள் சுற்றுப்பயணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு மதுரை வந்தடைந்தார். பின்னர் மதுரை மணிச்சாலையில் உள்ள மறைந்த பின்னணி பாடகர் டி எம் சௌந்தரராஜன் திருவுருவ சிலையை திறந்து வைத்துவிட்டு விமான நிலைய சாலையில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு ஓய்வெடுத்தார்.
அதைத்தொடர்ந்து ராமநாதபுரம் செல்வதற்காக இன்று காலை 9:30 மணியளவில் தனியார் விடுதியில் இருந்து கார் மூலம் புறப்பட்டு மதுரை சிலைமான் பகுதியில் உள்ள அண்ணா மன்றத்தில் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சர் ஆன முரசொலி மாறனின் 90 வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து அங்குள்ள முரசொலி மாறன் நூலகத்தை திறந்து வைத்து பார்வையிட்டு அங்கிருந்த வருகைப் பதிவேட்டில் கையெழுத்திடுவிட்டு மீண்டும் காரில் புறப்பட்டு ராமநாதபுரம் செல்கிறார்.
