Chennai T Nagar-ல் திடுக்கிடும் சம்பவம்..டெலிகிராம் வீடியோகால் மூலம் சுற்றிவளைத்த போலீஸ்
சென்னை தி.நகரில், ஐஸ் பேக்டரி உரிமையாளர் வீட்டில் 40 சவரன் நகைகள் திருடு போன வழக்கில், அவரது வீட்டில் பணிபுரிந்து வந்த நேபாளத்தை சேர்ந்த பிரகாஷ் சிங் மற்றும் அவரது கூட்டாளிகள் 3 பேரை போலீசார் கைது செய்தனர். 100க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார், கொள்ளையர்கள் பயணித்த ராபிடோ ஆட்டோவை வைத்து அவர்களை கண்டுபிடித்தனர். முதலில் பசந்த் என்பவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவரை பாரில் அமரவைத்து, டெலிகிராம் மூலம் மற்றவர்களுக்கு வீடியோ கால் செய்து, வேறொரு கொள்ளையில் ஈடுபடலாம் என வரவழைத்து கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில், 400 சவரனுக்கு மேல் இருக்கும் என எண்ணி கொள்ளையில் ஈடுபட்டதாகவும், ஆனால் 40 சவரன் மட்டுமே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்..
Next Story