`ஆண்மையுள்ள'.. மேடையில் அமைச்சர் விட்ட வார்த்தை - உடனே திருத்திய Dy CM உதயநிதி ஸ்டாலின்
சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில், ஆண்மையுள்ள மாநிலம் தமிழ்நாடு என்று உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் பேசியதை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையிலேயே திருத்தினார். அமைச்சர் கோவி. செழியன் பேசும்போது, ஒரே கல்வி முறையை மத்திய அரசு திணிக்க முயலும்போது, துடித்து எழுந்து எதிர்க்கும் ஆண்மையுள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று கூறினார். அதற்கு மறுப்பு தெரிவித்த துணை முதல்வர் ஸ்டாலின், ஆண்மை என்றால் வீரம் என்று பொருள் கிடையாது என்றும், ஆண்களுக்கு நிகராக பெண்களும் இருக்கிறார்கள் என்றும் கூறினார்.
Next Story