Chennai | Nellai | Police | நெல்லையில் வைத்து கைது செய்த போலீசார்
சென்னையில் திருமண ஆசைகாட்டி10 பெண்களை ஏமாற்றி பணம் பறித்த கல்யாணராமனை போலீசார் கைது செய்தனர். சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த பெண்ணை மேட்ரிமோனி மூலம் சந்தித்த சூர்யா, அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். பின்னர் வீடு கட்டுவதாக கூறி அவரிடம் எட்டு லட்ச ரூபாய் ரொக்கம் 9 பவுன் தங்க நகைகளைப் பறித்துக் கொண்டு நெல்லையில் தலைமறைவான சூர்யாவை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர் இதே பாணியில் துரைப்பாக்கத்தில் 10 பெண்களிடம் கைவரிசை காட்டியது தெரியவந்தது. இதனிடையே, கழிவறைக்குச் சென்ற சூர்யா வழுக்கி விழுந்ததில் அவரது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
Next Story
