சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர் : ஜாமீன் நிபந்தனையிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் உள்ள நிபந்தனையை முழுமையாக விலக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில் கருணாஸ் ஆஜர் : ஜாமீன் நிபந்தனையிலிருந்து விலக்கு கோரி மனு தாக்கல்
Published on
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் போலீஸ் உயர் அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருணாஸ், தனக்கு வழங்கப்பட்ட ஜாமீனில் உள்ள நிபந்தனையை முழுமையாக விலக்க கோரி மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை அல்லிக்குளம் நீதிமன்றத்தில், வழக்கு விசாரணைக்காக எம்.எல்.ஏ.கருணாஸ் இன்று காலை ஆஜரானார். உடல்நிலை சரியில்லாததால் தினமும் நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையிலிருந்து முழு விலக்கு அளிக்கக்கோரி கருணாஸ் தரப்பில் , அப்போது மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு பிற்பகல் 2.30 மணிக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி ரோஸ்லின் துரை அறிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com