

* தமிழகம் முழுவதும் வாக்காளர் சிறப்பு முகாம் இன்று நடைபெற்று வரும் நிலையில், சென்னை எழும்பூர், அயனாவரம், பெரம்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை திமுக தலைவர் ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார்.
* இதேபோல், கொளத்தூர் தொகுதிக்குட்பட்ட சாந்தி காலணி பகுதிகளில் மழையால் பழுதடைந்த பகுதிகளை நேரில் பார்வையிட்டு அவர் ஆய்வு செய்தார்.
அங்குள்ள, கெளதமபுரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் புதிதாக கட்டப்பட உள்ள நிலையில், முழுவதுமாக இடிக்கப்பட்டுள்ள அப்பகுதியை பார்வையிட்டு கட்டுமானப் பணிகள் குறித்து ஸ்டாலின் கேட்டறிந்தார்.