Chennai DMK Conference | சென்னை ECRல் தெறிக்கவிடும் திமுக.. மிரளவிடும் பிரமாண்ட ஏற்பாடு
Chennai DMK Conference | சென்னை ECRல் தெறிக்கவிடும் திமுக.. மிரளவிடும் பிரமாண்ட ஏற்பாடு "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" - இன்று திமுக மாநாடு சென்னை, விழுப்புரம் மண்டலத்தின் 49 சட்டமன்றத் தொகுதிகளிலும் உள்ள, திமுக வாக்குச்சாவடி குழுவினர் கலந்துகொள்ளும், "என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி" மாநாடு, இன்று மாலை 4 மணியளவில், சென்னை, ஈ.சி.ஆர் சாலையில் உள்ள திருவிடந்தையில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் திமுக சார்பாக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (BLA2), வாக்குச்சாவடி நிலை குழு உறுப்பினர்கள் (BLC), வாக்குச்சாவடி டிஜிட்டல் முகவர்கள் (BDA), வாக்குச்சாவடி நிலை இளைஞரணி நிர்வாகிகள் (BYO) என, ஒரு லட்சத்து 70 ஆயிரம் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கலந்துகொள்ள உள்ளனர். மேலும் அவர்களுக்கு திமுக தலைவரும், தமிழ்நாடு முதலவருமான மு.க.ஸ்டாலின், தேர்தல் வியூகங்கள் மற்றும் களப்பணி குறித்து ஆலோசனைகள் வழங்க உள்ளார். இந்த மாநாட்டிற்காக 10 லட்சம் சதுர அடி பரப்பளவில், பிரம்மாண்ட திடல் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட வாரியாகத் தனித்தனி அமர்வு பகுதிகள், முகவர்களுக்கு குடிநீர், சிற்றுண்டி, கழிவறை, மினி கிளினிக் உள்ளிட்ட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வருகிற 2026 சட்டமன்ற பொதுத் தேர்தலில் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு, கட்சியைப் பலப்படுத்த இந்த மாநாடு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.
