Chennai Crime | ரூ.1.5 கோடி ஏமாற்றிய மோசடி மன்னன் | அதிரவைக்கும் பின்னணி
Chennai Crime | திமுக to தவெக என விளம்பரம் | ரூ.1.5 கோடி ஏமாற்றிய மோசடி மன்னன் | அதிரவைக்கும் பின்னணி #chennai #crime #TNpolice #thanthitv கடன் வாங்கி தருவதாக ரூ.1.5 கோடி பெற்று ஏமாற்றிய மோசடி மன்னன் கைது சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்த லயன் முத்துவேல் என்பவரை, ஒன்றரை கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். தொழிலதிபர் ஒருவரிடம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், காவல் ஆணையரின் தனிப்படையினர் அவரைக் கைது செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், ஏற்கெனவே பெரிய தொகையைக் கடனாகப் பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாகவும் முத்துவேல் மீது பல புகார்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து திமுகவில் இருந்து தவெக கட்சியில் இணைந்ததாகக் கூறி விளம்பரங்களைச் செய்து வந்துள்ளார். கட்சியில் எந்தப் பொறுப்பும் வழங்கப்படாத போதும் சுவர் விளம்பரங்கள் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த மோசடி விவகாரம் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
