Chennai | Credai Fairpro | சென்னையில் கிரெடாய் பேர்ப்ரோ 2026 ரியல் எஸ்டேட் கண்காட்சி தொடக்கம்
Chennai | Credai Fairpro | சென்னையில் கிரெடாய் பேர்ப்ரோ 2026 ரியல் எஸ்டேட் கண்காட்சி தொடக்கம் கிரெடாய் பேர்ப்ரோ 2026 ரியல் எஸ்டேட் கண்காட்சி தொடக்கம் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் (CREDAI FAIRPRO) கிரெடாய் பேர்ப்ரோ 2026 என்ற ரியல் எஸ்டேட் கண்காட்சி நடக்கிறது. 3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். கிரெடாய் சென்னை அமைப்பின் தலைவர் முகமது அலி , முன்னாள் தலைவர் எஸ்.சிவகுருநாதன் மற்றும் கண்காட்சி ஒருங்கிணைப்பாளர் மோதிஷ் குமார் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். இக்கண்காட்சியில், 80க்கும் மேற்பட்ட கட்டுமான நிறுவனங்கள், 500க்கும் அதிகமான திட்டங்களை காட்சிப்படுத்தி உள்ள. மேலும் 15 லட்சம் ரூபாய் முதல் 15 கோடி ரூபாய் வரை, அபார்ட்மெண்ட்கள், வில்லாக்கள், வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளன.
