DMK | Chengalpattu| டூவீலரில் சென்று செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தீவிர பிரசாரம்
DMK | Chengalpattu | TN Election 2026 | டூவீலரில் சென்று செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தீவிர பிரசாரம் #DMK #chengalpattu #TNElection2026 #thanthitv செங்கல்பட்டு திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தீவிர பிரசாரம் செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள கார்த்திக் தண்டபாணி, எளிமையான முறையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகரமன்ற தலைவரான கார்த்திக் தண்டபானி, திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டதையடுத்து, செங்கல்பட்டு நகரின் பல பகுதிகளில் இருசக்கர வாகனத்தில் சுற்றியபடி, கட்சி நிர்வாகிகளை சந்தித்து உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். குறிப்பாக, நத்தம், தட்டான்மலை தெரு, பழைய பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டணி கட்சியினருடன் மக்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
