Charles Martin| Vijay | "விஜய் விரும்பினால் கூட்டணிக்கு தயார்" - சார்லஸ் மார்டின் அறிவிப்பு

x

விஜய் விரும்பினால் கூட்டணி சேரலாம் என சார்லஸ் மார்டின் அறிவிப்பு

தவெக தலைவர் விஜய் விரும்பினால் அவருடன் கூட்டணி அமைக்க தயார் என சமூக சேவகர் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி மணவெளி தொகுதிக்குட்பட்ட தவளக்குப்பம் பகுதியில், JCM மக்கள் மன்றத்தை அவர் திறந்து வைத்து 1,000க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், விரைவில் அரசியல் கட்சி தொடங்கி பெயர் மற்றும் கொள்கையை அறிவிக்க போவதாகவும் கூறினார். மேலும், புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துவது குறித்து தவெக மறுபரிசீலனை செய்ய வேண்டுமென சார்லஸ் மார்டின் கேட்டுக்கொண்டார்.


Next Story

மேலும் செய்திகள்