பிரதமர் பேச்சால் ட்விஸ்ட் - NDA-வில் இணையும் தேமுதிக?

x

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது அன்பு நண்பர் என பிரதமர் மோடி கூறியுள்ளார். விஜயகாந்தும் தானும் பல ஆண்டுகள் நெருக்கமாகப் பழகி, ஒன்றாக வேலை செய்தோம் என்றும், தலைமுறை தலைமுறையாக சமூகத்திற்கு அவர் செய்த நன்மைக்காக மக்கள் அவரை நினைவுகூர்கின்றனர் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிகவும் இணையக்கூடும் என பரவலாக பேசப்படும் நிலையில், விஜயகாந்த் உடனான தனது உறவு குறித்து பிரதமர் மோடி நெகிழ்ச்சி தெரிவித்து இருப்பது அரசியல் தளத்தில் கவனம்பெற்றுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்