`சவால்கள்'... வந்துவிழுந்த கேள்வி... தவெக ஆனந்த் ராபிட் பதில்
கோவையில் தமிழக வெற்றிக்கழகத்தின் மண்டல கருத்தரங்க ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருவதாக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கம் நடைபெறும் இடத்தை பார்வையிடுவதற்காக, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விமானம் மூலம் வந்திருந்தார். கட்சித் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் இனிப்புகள் வழங்கி வரவேற்றனர். அன்னூர் சாலையில் அமைந்துள்ள தனியார் கல்லூரியில், வருகிற சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிலையில் மண்டல கருத்தரங்க ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருவதாக, தந்தி டி.வி.க்கு அளித்த பேட்டியில், புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார்.
Next Story
