நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் - யார் இந்த ருஜிரா பானர்ஜி?

நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது.
நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜிக்கு சிபிஐ சம்மன் - யார் இந்த ருஜிரா பானர்ஜி?
Published on

நிலக்கரி கடத்தல் வழக்கில் ருஜிரா பானர்ஜி என்பவருக்கு சிபிஐ சம்மன் அனுப்பி உள்ளது. மேற்கு வங்க அரசியலில் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் யார் இந்த ருஜிரா பேனர்ஜி என்று பார்க்கலாம்...

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அபிஷேக் பானர்ஜி என்பவரின் மனைவிதான் இந்த ருஜிரா பேனர்ஜி.

அபிஷேக் பேனர்ஜி மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் உறவினர்.

அபிஷேக் பானர்ஜி, திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக டயமண்ட் ஹார்பர் தொகுதி எம்.பி.யாகவும் உள்ளார்.

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக நிலக்கரி வெட்டி எடுத்தது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள அனுப் லாலா என்பவர், இந்த வழக்கில் இருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ருஜிரா பானர்ஜியிடம் லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இந்த வழக்கில் தான் விசாரணைக்கு ஒத்துழைக்கும்படி ருஜிராவுக்கும் அவரது சகோதரி மேனகா கம்பீருக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளது.

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் தனது மருமகன் அபிஷேக் பானர்ஜிக்கு அடுத்த முறை முதல்வர் பதவியை மம்தா வழங்க உள்ளதாக பரவலாக பேச்சு உள்ளது.

அபிஷேக் பானர்ஜியை குறிவைக்கும் நோக்கில் அவரது மனைவிக்கும், மனைவியின் சகோதரிக்கும் சிபிஐ சம்மன் அனுப்பியுள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது.

X

Thanthi TV
www.thanthitv.com