சாதிவாரி கணக்கெடுப்பு - ராகுல் காந்தி வரவேற்பு | Caste Census | Rahul Gandhi | Congress

x

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதை முழுமையாக ஆதரிப்பதாக, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். சாதிவாரி கணக்கெடுப்பை நடத்திக் காட்டுவோம் என்று தாங்கள் நாடாளுமன்றத்தில் கூறியிருந்ததாகவும், திடீரென்று 11 ஆண்டுகளுக்குப் பிறகு அதுகுறித்து தற்போது அறிவிப்பு வெளியாகியிருப்பதாகவும் குறிப்பிட்டார். சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவு அளிக்கிறோம்... ஆனால், ஒரு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும் என விரும்புவதாக ராகுல் காந்தி குறிப்பிட்டார். இது எப்போது நடக்கும் என்பதை தாங்கள் அறிய விரும்புவதாகவும், சாதிவாரி கணக்கெடுப்பை வடிவமைப்பதில் அரசாங்கத்திற்கு தங்கள் ஆதரவை வழங்குவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்