அஜித் பவாருக்கு எதிரான எந்த வழக்கும் கைவிடப்படவில்லை - ஊழல் தடுப்பு ஆணையம்

அஜித்பவார் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டு உள்ளதாக தகவல்.
அஜித் பவாருக்கு எதிரான எந்த வழக்கும் கைவிடப்படவில்லை - ஊழல் தடுப்பு ஆணையம்
Published on
கடந்த 1999 மதல் 2014 ஆம் ஆண்டு வரை மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்றது. பொதுப்பணித்துறையை, சரத்பவார் அண்ணன் மகனான அஜித்பவார் கவனித்த நிலையில், 72 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக அம்மாநில லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டு இருந்தது. எந்த நேரத்திலும் அஜித்பவார் சிறைக்கு செல்ல வேண்டும் என்று பா.ஜ.க.வினர் கூறி வந்த நிலையில், தற்போது அஜித்பவார் மீதான வழக்கு விசாரணை கைவிடப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதனிடையே எந்த வழக்கும் கைவிடப்படவில்லை என,மாநில ஊழல் தடுப்பு காவல் இயக்குனர் பரம்வீர் சிங் தெரிவித்துள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com