

12 மணி நேர விவாதங்களுக்குப் பிறகு, திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவிற்கு மக்களவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது வருத்தமளிப்பதாக, அந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இந்திய அரசு, குடியுரிமை வழங்க மதத்தைக் கையில் எடுத்துள்ளதாக கருத்து தெரிவித்துள்ள அந்த ஆணையம், இது பல லட்ச முஸ்லிம்களின் குடியுரிமை பறிபோக வழிவகுக்கும் என கூறியுள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா ஒப்புதல் பெற்றால், அமித்ஷாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அதிபர் டிரம்ப் மற்றும் நாடாளுமன்றம், வெளியுறவு அமைச்சருக்கு அமெரிக்க அரசு ஆணையம், பரிந்துரை செய்துள்ளது.