அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கூட்டம் : டிடிவி தினகரன் மீது 3 காவல்நிலையங்களில் வழக்கு

அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக தினகரன் உள்ளிட்டோர் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி கூட்டம் : டிடிவி தினகரன் மீது 3 காவல்நிலையங்களில் வழக்கு
Published on
அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டி பேசியதாக தினகரன் உள்ளிட்டோர் மீது சேலம் மாவட்டத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சேலம் மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், கெங்கவல்லி, தம்மம்பட்டி, மல்லியகரை உள்ளிட்ட இடங்களில், காவல்துறை அனுமதித்த நேரத்தை தாண்டி பேசியுள்ளார். இதையடுத்து அந்த கிராமங்களின் நிர்வாக அலுவலர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில், மூன்று காவல் நிலையங்களிலும் தினகரன் உள்ளிட்ட பலர் மீது 143 , 341 ஆகிய இரு பிரிவின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com