

நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக தி.முக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக வழக்கு தொடர தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் அனுமதி அளித்துள்ளார்.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய ஆர்.எஸ்.பாரதி, பட்டியலின சமுதாயத்தினருக்கு நீதிபதி பதவி கிடைத்தது திராவிட இயக்கம் போட்ட பிச்சை என குறிப்பிட்டிருந்தார். அவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி, வழக்கறிஞர் ஆன்டனிராஜ் என்பவர், தலைமை வழக்கறிஞரிடம் மனு அளித்திருந்தார். இதற்கு அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், அனுமதி அளித்துள்ளார்.