கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - நிர்மலா சீதாராமன் தகவல்

கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் இல்லை - நிர்மலா சீதாராமன் தகவல்
Published on

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் பதில் அளித்த அவர்

2016-2017 கல்வி ஆண்டில் இருந்து 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையிலான 3 ஆண்டுகளில் நிலுவையில் உள்ள கல்விக்கடன்களின் தொகை 75 ஆயிரத்து 450 கோடியே 68 லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.

கல்விக்கடன்களை திருப்பி செலுத்துமாறு வங்கிகள் அளித்த நிர்ப்பந்தத்தால் எந்த மாணவரும் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் இல்லை என்றும் கல்விக்கடன்களை திரும்ப வசூலிக்க பலவந்த நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தி இருப்பதாகவும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

கல்விக்கடன்களை தள்ளுபடி செய்யும் திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை என்று குறிப்பிட்டுள்ள அவர், வங்கிகள் அளித்த கல்விக்கடன்களையும் கிடைத்த வேலைவாய்ப்புகளையும் ஒப்பிட்டு பார்க்கக்கூடிய புள்ளிவிவரம் எதுவும் இல்லை என்று தெரிவித்துள்ளார்..

X

Thanthi TV
www.thanthitv.com