``முடியுமா?முடியாதா?’’ - ஒரே கேள்வியில் லாக்..ஈபிஎஸ் முகத்துக்கு நேராக கேட்ட CM

x

நீட் தேர்வை ரத்து செய்தால் மட்டுமே கூட்டணி வைப்போம் என்று கூற அதிமுகவிற்கு அருகதை உள்ளதா? என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு அதிமுக செய்த துரோகத்திற்கு பலனாகத்தான், 11 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக ஆட்சியில் தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்தது... வடிவேலு நகைச்சுவையில் வரும் பேக்கரி டீலிங் போல அந்த டீலிங் நடந்ததாக அமைச்சர் சிவசங்கர் பேசினார். இதற்கு பதிலளித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, காங்கிரஸ் - திமுக ஆட்சியில் தான் நீட் தேர்வுக்கு பிள்ளையார் சுழி போடப்பட்டதாக தெரிவித்தார். அப்போது பதிலளித்த முதலமைச்சர் ஸ்டாலின், நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என வாக்குறுதி கொடுத்தது உண்மைதான்....ஆனால் தங்கள் கூட்டணி ஆட்சி மத்தியில் அமையவில்லை என்று தெரிவித்தார். பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லை என கூறிவிட்டு இப்போது கூட்டணி வைத்தது ஏன்? என்றும் முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.


Next Story

மேலும் செய்திகள்