``CAA சட்டத்தில்... இஸ்லாமியர்களுக்கு...'' அமித் ஷா சொன்ன முக்கிய தகவல்

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, குடியுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது, மாறாக, குடியுரிமையை பறிக்க கொண்டுவரப்படவில்லை என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.

குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் குடியுரிமை பெற்றவர்களுடன் அமித்ஷா உரையாற்றினார்.

அப்போது, முந்தைய அரசுகளின் திருப்தி அரசியலால் இந்தியாவில் தஞ்சம் புகுந்தவர்களின் உரிமைகளும் நீதியும் மறுக்கப்பட்டது என்று கூறினார்.

முந்தைய அரசுகள் ஊடுருவல்களை அனுமதித்து, அவர்களை சட்ட விரோதமாக குடிமக்களாக்கியது என்றும்,

ஆனால் சட்டத்தை பின்பற்றியவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது குடியுரிமை வழங்குவதற்காக கொண்டுவரப்பட்டது என்பதையும்,

மாறாக, குடியுரிமையை பறிக்கவில்லை என்பதை இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தாம் தெளிவுபடுத்த விரும்புவதாகவும் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com