

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை, பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.
பேரணியின் முடிவில் பேசிய மம்தா பானர்ஜி, மக்களை தவறாக வழி நடத்த பிரதமர் மோடி பொய்களைப் பேசுவதாக புகார் கூறினார். தேர்தல் விளையாட்டை விளையாட தாம் தயாராக உள்ளதாகவும், பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் எனவும் கூறினார். பேரவை தேர்தலுக்கு பின் மத்திய அரசில் தான் மாற்றம் நடக்கும், மேற்கு வங்கத்தில் நடக்காது என்றும் மம்தா கூறினார். மேலும், மேற்கு வங்க பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்று கூறும் பிரதமர், அதற்கு முன், பீகார், உத்தர பிரதேச மாநிலங்களின் நிலையை பார்க்க வேண்டும் எனவும் மம்தா கூறினார்.