பட்ஜெட் 2020 : உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு

உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு 100 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விரைவில் தேசிய சரக்கு கையாளுதல் கொள்கை கொண்டுவரப்படும் என்றும் 2023ஆம் ஆண்டுக்குள் டெல்லி- மும்பை இடையே விரைவு சாலை திட்டம் செயல்பாட்டுக்கு வரும் எனவும்எலக்ட்ரானிக் உற்பத்தித் துறைக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தொழில்துறை மற்றும் வணிகத்துறைக்கு 27300 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

X

Thanthi TV
www.thanthitv.com