பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரின் அருகே பறந்த கருப்பு பலூன்கள் - அதிர்ந்துபோன அதிகாரிகள்
பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டரின் அருகே பறந்த கருப்பு பலூன்கள் - அதிர்ந்துபோன அதிகாரிகள்
ஆந்திர பிரதேசத்தில் பிரதமர் மோடி சென்ற ஹெலிகாப்டருக்கு கருப்பு பலூனை காட்டிய காங்கிரஸ் கட்சியினர் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா கன்னவரம் விமான நிலையத்தில் இருந்து பீமாவரத்திற்கு பிரதமரின் ஹெலிகாப்டர் புறப்படுவதை அறிந்த காங்கிரஸ் கட்சியினர் கருப்பு பலூன்களை பறக்க விட தொடங்கினர். சில நிமிடங்கல்களில் ஆகாயத்தில் மிதந்த பலூன்கள் வழியே பிரதமர் நரேந்திரமோடி சென்ற ஹெலிகாப்டர் மற்றும் பாதுகாப்பு பணிக்காக சென்ற 2 ஹெலிகாப்டர் கடந்து செல்லும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 4 பேரை கிருஷ்ணா மாவட்ட காவல்துறை கைது செய்துள்ளது. மேலும் சிலரை தேடி வருவதாகவும் அவர்களும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என கிருஷ்ணா மாவட்ட காவல்துறை இணை கண்காணிப்பாளர் விஜய் பால் தெரிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்திற்கு இன்னும் சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாததை கண்டித்து கருப்பு பலூன் பறக்க விட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.