கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு

கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்றுக்கொண்டார்.
கோவா முதலமைச்சராக பிரமோத் சாவந்த் பதவியேற்பு
Published on

கோவா முதலமைச்சராக இருந்த மனோகர் பாரிக்கார் மரணம் அடைந்ததைத்தொடர்ந்து, சபாநாயகர் பிரமோத் சாவந்த் புதிய முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ராஜ்பவனில் நேற்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில் கவர்னர் மிருதுளா சின்ஹாபதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அவருடன் 11 பேர் அமைச்சர்களாக பதவியேற்று கொண்டனர். இதில் கூட்டணி கட்சிகள் மற்றும் சுயேட்சை உறுப்பினர்களும் அடக்கம். 40 பேர் கொண்ட கோவா சட்டசபையில் பாரதிய ஜனதாவுக்கு மொத்தம் 12 உறுப்பினர்கள் உள்ளனர். கோவா பார்வர்டு கட்சியில் 3 பேர், எம்.ஜி.பி. கட்சியில் 3 பேர், சுயேச்சைகள் 3 பேர் என கூடுதலாக 9 பேருடன் 21 உறுப்பினர்கள் ஆதரவுடன் பாரதிய ஜனதா ஆட்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே ஆட்சி அமைக்க தங்களை அழைக்க வேண்டும் என ஆளுனரை சந்தித்து காங்கிரஸ் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

X

Thanthi TV
www.thanthitv.com