"பாஜகவின் 3-வது முறை ஆட்சியில்" - பிரதமர் நரேந்திர மோடி உறுதி

டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் மறு சீரமைக்கப்பட்டுள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மைய வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த கட்டிடத்தில், செப்டம்பர் மாதம் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, புதிதாக கட்டப்பட்ட பாரத் மண்டபத்தில் ஜி-20 நாடுகளின் உச்சி மாநாடு நடைபெறும் போது இந்தியாவின் அந்தஸ்து உயர்வதற்கு உலக நாடுகள் சாட்சியாக திகழும் என்றார். இந்தியாவின் வளர்ச்சி பயணம் ஒருபோதும் நிற்கப்போவதில்லை எனவும் குறிப்பிட்டார். பாஜகவின் முதலாவது ஆட்சிக்காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா பத்தாவது இடத்தில் இருந்ததாக குறிப்பிட்ட பிரதமர், இரண்டாவது ஆட்சி காலத்தில் இந்தியா உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருப்பதாகவும் கடந்த கால சாதனைகளின் அடிப்படையில் பாஜகவின் மூன்றாவது ஆட்சி காலத்தில் உலக பொருளாதாரத்தில் இந்தியா மூன்றாவது இடத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com