"ஜார்கண்டில் 5 ஆண்டு நிலையான ஆட்சி தந்தது பா.ஜ.க." - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
"ஜார்கண்டில் 5 ஆண்டு நிலையான ஆட்சி தந்தது பா.ஜ.க." - மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா
Published on

ஜார்கண்ட் மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் 7-ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி பாஜக தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித்ஷா சக்ரதார்பூர் பகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ஜார்கண்ட் மாநிலத்தில் பாஜக தலைமையிலான ஆட்சியில் எந்த ஊழல் குற்றச்சாட்டு இல்லை என்று தெரிவித்தார். ஜார்கண்ட் மாநிலத்தில் 5 ஆண்டுகள் முழுமையாக நீடித்தது பா.ஜ.க அரசுதான் என்று அவர் குறிப்பிட்டார். மத்தியிலும், மாநிலத்திலும் ஒரே ஆட்சி இருந்தால்தான் ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும் என்றும் அமித்ஷா கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com