BJP | ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. யார் யார்..? எங்கே போட்டி..? அதிரடியாக வெளியான வேட்பாளர்கள் லிஸ்ட்
BJP | ஆட்டத்தை ஆரம்பித்த பாஜக.. யார் யார்..? எங்கே போட்டி..? அதிரடியாக வெளியான வேட்பாளர்கள் லிஸ்ட்
புதுச்சேரியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பில் போட்டியிடும் 9 வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகி உள்ளது. அதன்படி, மண்ணாடிப்பட்டு தொகுதியில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுகிறார். ராஜ்பவன் தொகுதியில் வி.பி.ராமலிங்கமும், முதலியார்பேட்டையில் ஜான்குமாரும் களம்காண்கின்றனர். மணவெளி தொகுதியில் ஏம்பலம் செல்வம், காலாப்பட்டில் கல்யாணசுந்தரம், ஊசுடு தொகுதியில் தீப்பாய்ந்தான் பெயர் வெளியிடப்பட்டுள்ளது. அதேபோல், திருநள்ளாறில் ராஜசேகரன், நிரவி டி.ஆர்.பட்டினத்தில் மீனாட்சி சுந்தரம், மாஹேவில் தினேசன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
