டாஸ்மாக் ஊழியரை உள்ளே வைத்து பாஜகவினர் செய்த சம்பவத்தால் பரபரப்பு
கும்பகோணத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தின் போது மதுக்கடையை மூடிய விவகாரத்தில் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கும்பகோணத்தில் ரயில் நிலையம் செல்லும் சாலையில் உள்ள மதுக்கடைகள் முன்பாக பாஜகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். காவல்துறையின் அனுமதியின்றி நடந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக நிர்வாகிகள் சிலர், கடையின் உள்ளே தொழிலாளர்கள் பணியில் இருக்கும் போது, மதுக்கடைகளின் ஷட்டரை திடீரென இழுத்து மூடினர். இச்சம்பவம் தொடர்பாக கார்த்தி, கலையரசன் ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருவரை தேடி வருகின்றனர்.
Next Story
