BJP|| mamata banerjee || பாஜக எம்பியை சந்தித்து நலம் விசாரித்த மம்தா பானர்ஜி

x

மேற்கு வங்கத்தில் வெள்ள பாதிப்புக்கு உள்ளான நக்ரகாட்டா பகுதியில் நிவாரண உதவிகளை வழங்குவதற்காக சென்ற பாஜக எம்பி ககன் முர்மு, கொடூர தாக்குதலுக்கு ஆளான சம்பவம் அம்மாநில அரசியலில் பலரது கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்த நிலையில், சிலிகுரியில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ககன் முர்முவை மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி நேரில் சென்று பார்த்து உடல்நலம் விசாரித்தார். பிறகு ககன் முர்மு நலமுடன் இருப்பதாகவும், நீரழிவு நோயால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அவர், அதனை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும், செய்தியாளர்களிடம் தெரிவித்தார்


Next Story

மேலும் செய்திகள்