பாஜக தேர்தல் அறிக்கை... நாடே எதிர்ப்பார்க்கும் முக்கியமான 3 பாயிண்ட் - எகிறும் பல்ஸ்
மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் இந்த குழுவின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. குழுவின் ஒருங்கிணைப்பாளரான மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை ஒருங்கிணைப்பாளரான மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் குழு உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் காலை 11 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, தேர்தல் அறிக்கையில் இடம்பெற உள்ள முக்கிய அம்சங்கள், வாக்குறுதிகள் குறித்து ஆலோசிக்கப்படும். பாஜக அறிவித்த செல்போன் எண், நமோ செயலி, சமூக வலைத்தளங்கள் வாயிலாக பொதுமக்களிடம் பெறப்பட்ட கருத்துக்கள் ஆலோசனைக்கு எடுத்துக்கொள்ளப்படும். விவசாயிகள், பெண்களுக்கான திட்டங்கள், வேலைவாய்ப்பு போன்ற அறிவிப்புகள் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
