

சென்னை கோடம்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நலத்திட்டங்களில் உள்ள நன்மைகளை எதிர்க்கட்சிகள் பார்ப்பதில்லை என தெரிவித்தார். விவசாயிகள் மீது எதிர்க்கட்சிகளுக்கு இருக்கும் அக்கறையை விட, மத்திய அரசுக்கு அதிக அக்கறை இருப்பதாக தெரிவித்த தமிழிசை, விளைநிலங்கள் பாதிக்கப்படாமல் சாலைகள் அமைவதையே மத்திய அரசு விரும்புவதாகவும் தெரிவித்தார்.