ராஜ்பவன் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு... அனல் பறக்கும் புதுவை களம்
#bjp | #puducherry | #politics ராஜ்பவன் தொகுதியில் பாஜக வேட்பாளர் ராமலிங்கம் தீவிர வாக்கு சேகரிப்பு... அனல் பறக்கும் புதுவை தேர்தல் களம் புதுச்சேரி ராஜ்பவன் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் ராமலிங்கம், மிஷன் வீதி மற்றும் ரங்கப்பிள்ளை வீதி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது தொண்டர்களின் வீடுகளுக்குச் சென்ற அவர், அங்கேயே உணவருந்தி, குழந்தைகளுடன் விளையாடி நெகிழ்ச்சியை ஏற்படுத்தினார். தொடர்ந்து பேசிய அவர், "மக்களோடு மக்களாக இருக்கும் தன்னையும், தனது நேர்மையையும் வாக்காளர்கள் நன்கு அறிவார்கள் என்றும் பிரதமர் மோடியின் கரத்தை வலுப்படுத்த மக்கள் பாஜகவிற்கு வாக்களிக்கத் தயாராகிவிட்டனர் எனவும் தெரிவித்தார். மேலும், வெற்றி பெற்றால் மத்திய அரசின் சிறப்பு நிதி மூலம் ராஜ்பவன் தொகுதியை மாநிலத்திலேயே முதன்மை வளர்ச்சி பெற்ற தொகுதியாக மாற்றுவேன் எனவும் அவர் உறுதி அளித்தார்.
