அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட வந்த பாஜகவினர் - கொத்தாக தூக்கிய போலீசார்

சென்னையை அடுத்த நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயிலில் 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய தங்கத்தேர் செய்வதற்கு ஏதுவாக மரத்தேர் செய்யும் பணிக்கான தொடக்க விழா நடந்தது. இதில் அமைச்சர்கள் சேகர்பாபு, தா.மோ.அன்பரசன், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டு மரத்தேர் செய்யும் பணியை தொடங்கி வைத்தனர். முன்னதாக, அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட வந்த பாஜகவினர் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

X

Thanthi TV
www.thanthitv.com