பாஜக அதிமுக சந்தர்ப்பவாத கூட்டணி' - குற்றச்சாட்டிய எம்.ஏ.பேபி | BJPADMK Alliance

x

சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.பேபி மரியாதை நிமித்தமாக சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,பாஜக அதிமுக கூட்டணி ஒரு சந்தர்ப்பவாத கூட்டணி என்றும், வக்பு சட்டத்திற்கு எதிராக வாக்களித்த அதிமுக, பஜகவுடன் கூட்டணி வைத்துள்ளது முரணாக இருப்பதாக தெரிவித்தார். மேலும் இந்த கூட்டணியால் தமிழ்நாட்டில் எதுவும் நிகழப் போவதில்லை என தெரிவித்த அவர்,

திமுக கூட்டணி வலுவாக உள்ளதாகவும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் சேர் வாய்ப்பிருப்பதாவும் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்