Bihar | Floor Test | பீகார் சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு - பாஜக அரசு வெற்றி
பீகார் மாநில சட்டப்பேரவையில் நடைபெற்ற பாஜக அரசின் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் பாஜக அரசு வெற்றி பெற்றுள்ளது. பீகார் மாநிலத்தில், கடந்த 15-ஆம் தேதி நிதீஷ் குமார் தனது பதவியை ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, அம்மாநிலத்தின் முதல் பாஜக முதலமைச்சராக சாம்ராட் சௌத்ரி பதவியேற்றார். அரசியலமைப்பு விதிப்படி புதிய அரசு அமைந்தால் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்பதால், நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் பேசிய முதல்வர் சாம்ராட் சௌத்ரி, குற்றம், ஊழல் மற்றும் மதவாதம் ஆகிய விஷயங்களில் தமது அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என உறுதியளித்தார். இறுதியில் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் பாஜக அரசு தனது பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெற்றது. 243 இடங்களைக் கொண்ட பீகார் சட்டப்பேரவையில், பாஜக மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணிக்கு மொத்தம் 201 உறுப்பினர்களின் பலம் இருப்பது குறிப்பிடத்தக்கது.
