Bihar election 2025 | பீகார் வரலாற்றுச் சாதனை.. தேர்தல் ஆணையர் வாழ்த்து
பீகார் சட்டப்பேரவை முதற்கட்ட தேர்தலில் அதிகபட்ச வாக்குகள் பதிவாகி உள்ளது. பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் 243 தொகுதிகளில் 121 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடந்த வாக்குப்பதிவில் 64 புள்ளி 66 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது பீகார் தேர்தல் வரலாற்றிலேயே அதிகபட்சமாக கூறப்படுகிறது. இந்த சாதனைக்கு காரணமான வாக்காளர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்து தெரிவித்தார்.
Next Story
